2026க்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை “முற்றிலும் ஒழிக்க” தனது தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தினார்.
பஸ்தார் ஒலிம்பிக்-2024 நிறைவு விழாவின் போது பொதுமக்களிடம் உரையாற்றிய ஷா கூறியதாவது: கடந்த பத்தாண்டுகளில் நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களின் இறப்புகளில் 73 சதவீதம் குறைப்பு மற்றும் பிராந்தியங்களில் பொதுமக்கள் உயிரிழப்புகளில் 70 சதவீதம் குறைந்துள்ளது. 2026க்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியின் முதல் ஆண்டில், 287 நக்சல்கள் கொல்லப்பட்டனர், 992 பேர் கைது செய்யப்பட்டனர், 837 பேர் சரணடைந்தனர். நக்சல்கள் சரணடையவும், ஆயுதங்களை கைவிட்டு, தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க கேட்டுக்கொள்கிறேன். சத்தீஸ்கரின் சரணடைதல் கொள்கை நாட்டிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது என்று நான் பெருமையுடன் கூற முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, நக்சலிசத்தை ஒழிக்க மத்திய அரசு மற்றும் சத்தீஸ்கர் அரசின் உறுதிப்பாட்டை ஷா மீண்டும் வலியுறுத்தினார். நக்சல்களுக்கு எதிரான போராட்டத்தில் சாதித்த சத்தீஸ்கர் காவல்துறையினரை அவர் பாராட்டினார்