Close
நவம்பர் 21, 2024 6:43 மணி

ஆவணம் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல்: நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா.

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் ஆட்சியர்கூறியுள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த, 16ம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ள, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்தவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டளிக்க தூண்டுவதை தடுத்திடும் வகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லக் கூõடது.

பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுக்களால் ஆய்வின்போது வாக்காளர்களைக் கவரும் வகையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணம் மற்றும், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது, பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் எடுத்துச் செல்லவேண்டும்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும், ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களுக்கான, உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மேல்முறையீட்டு அலுவலரான, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் சமர்ப்பித்து மேல்முறையீடு செய்யலாம்.

பறிமுதல் செய்யப்படும்போது, காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டவை, கோர்ட் உத்தரவிற்குப் பின், உரிய வழிமுறைகளை பின்பற்றி, பணம் மற்றும் பொருட்கள் திரும்ப வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இந்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top