தீபாம்பாள்புரம்ம் ஓஎன்ஜிசி முற்றுகை போராட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டுமென அரசுக்கு போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் கிராமத்தில் எண்ணெய் கிணறு தோண்ட நடவடிக்கை மேற்கொண்ட போது இந்த பகுதியில் விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று இயற்கை வள ஆய்வாளரும், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனமான பொறியாளர் கோ. திருநாவுக்கரசு தலைமை யில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் மற்றும் ஆயிரக்கணக் கான மக்கள் பங்கேற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற் றது .
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மாநில செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநில துணைத்தலைவர் இரா.அருணாச்சலம், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்களும் பங்கேற்றனர்.
இவர்களில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கில் கோ.திருநாவுக் கரசு, இரா.அருணாச்சலம், பி.செந்தில்குமார், மோகன், அய்யாமதன், வெங்கடேஷ் உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்றத் தில் ஆஜராகினர். அடுத்த வாய்தா வருகிற 12 -ஆம் தேதி போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆஜராகி வந்த தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி.
மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ட்ரோகார்பன் எதிர்த்த போராட் டங்கள், குடியுரிமை சட்ட திருத்தம், எட்டு வழிச் சாலை, நியூட்ரினோ அணு கழிவுமையம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புபோராட்டம், இயற்கை வளத்தை பாதுகாக்க, ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது 2011 முதல் 2021 வரை பத்தாண்டுகளில் போடப்பட்ட 5,570 வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல மைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 4.9.2021 அன்று தமிழ்நாடு அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. மேலும் உலக நாடுகள் ஒன்று கூடி புவி வெப்பமயமாதலுக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் பூமிக்கு அடியில் உள்ள இயற்கை வளங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ள ஒப்பந்தத்தில் ஒன்றிய பிரதமர் மோடியும் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஆனால் இந்த மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு போராட்ட வழக்கு என்பது முடிக்கப்படாமல் ஆறு வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு இந்த வழக்குகளை முடிவுக் குக் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொறியாளர் கோ.திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.