Close
நவம்பர் 21, 2024 5:50 மணி

புதுக்கோட்டையில் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

புதுக்கோட்டை

புதுகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள்

கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரப்வுப் பணியாளர்கள் புதுக்கோட்டை நகராட்சி டிவிசன் அலுவரத்தை முற்றுகையிடடு சிஐடியு தலைமையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் துப்புரவு பணி செய்வதற்காக தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் 288 துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்ற னர். இவர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் மாத மாதம் 12,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம் முறையாக வழங்கப்படாததால், சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் அவ்வப்பொழுது போராட்டம் நடத்திய பிறகு சம்பளம் வழங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, புதுக்கோட்டை பேருந்து நிலையத் தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி 7-ஆவது டிவிசன் அலுவல கத்தை முற்றுகையிட்டு 288 ஒப்பந்த துப்புரவு பணியாளர் களும் போராடட்த்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சியத் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டப் பொதுச் செயலாளர் கே.முகமதலிஜின்னா, துணைத் தலைவர் எம்.முத்தையா ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ பிடித்த பணத்தை முறையாக வங்கியில் செலுத்த வேண்டும். துப்புரவு பணி செய்யும் தங்களுக்கு கைஉறை, துடைப்பம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.

நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை செய்ய மாட்டோம் என பணியை புறக்கணித்து தொழிலாளர் கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top