மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாடகை நாச்சிபுரத்தில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி,சாந்தி ஹோமம், பூரணாகுதியும் மாலை 5 மணிக்கு விக்னேஸ்வரர் ஆராதனை, தீபாரதனை செய்து வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. இரண்டாம்நாள் காலை 6 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாகவாஜனம், துவாரக பூஜை, வேதபாராயணத்துடன் யாக சாலை பூஜை நடந்தது.
காலை9 மணிக்கு யாத்திரை தானத்துடன், கடம் புறப் பட்டு கோவிலை வலம் வந்தது. 10.05 மணிக்கு சுவாமி சாச்வானந்தர் தலைமையில் அழகர் கோவில், ராமேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரினை கோவில் கலசகும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், செல்வ விநாயகருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
11 மணிக்கு அன்னதானம் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர்.
இதன் ஏற்பாடுகளை, தாடக நாச்சிபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத்துணைத் தலைவர்கதிரவன் ஆகியோர் செய்திருந்தனர்.