Close
செப்டம்பர் 20, 2024 6:52 காலை

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவராக என் நந்தகோபால் தேர்வு

ஈரோடு

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவராக என் நந்தகோபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவராக என் நந்தகோபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் 1927 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்க மாவட்ட தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது . இந்த தேர்தலில் என் நந்தகோபால் மாவட்ட தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள என் நந்தகோபாலின் பூட்டனார் வையாபுரி முதலியார் திருச்செங்கோடு செங்குந்தர்களுக்கு பாத்தியப்பட்ட எழுகரை மாநாட்டிற்கு உட்பட்ட கீழூர் உஞ்சனை கிராமத்தில் நாட்டாமைக்காரராக செங்குந்தர் சமுதாயத்திற்கு சிறப்பாக சேவையாற்றியுள்ளார்.

அதே போல் என்.நந்தகோபால்,ஈரோடு கோட்டை பகுதியில் நாச்சிமுத்து முதலியார்- ராஜாமணி அம்மாளுக்கு மகனான இவர் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் படித்து ஈரோடு கலைக் கல்லூரியில் படிப்பை முடித்து ஜவுளி சார்ந்த தொழில் செய்து வருகிறார்.

இவர் அனைத்து சமூகத்தினருக்கும் பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்துள்ளார் .இதற்காக அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. பாரதியார் சமூக கலாசார அகாடமி சேவா ரத்னா பட்டமும்,கன்னட நாட்டின் பிராம்ட் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

ஈரோடு தமிழ் சங்க பேரவை சார்பில் வள்ளல் விருது ,அம்பேத்கர் பெரியார் அமைப்பு சார்பில் அண்ணா விருது ,மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சிறந்த நுகர்வோர் விருது ,ஈரோடு கலைக்கல்லூரி இவருக்கு வாழ்நாள் சாதனையாக விருது வழங்கியுள்ளது. மேலும், வாழ்நாள் நெசவாளர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வீரப்பன்சத்திரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக பதவி வகித்துள்ளார்.இவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் தமிழக அரசு 2020-21 -ஆம் ஆண்டுக் கான சிறந்த கைத்தறி நெசவாளர் சங்கமாகவும், சிறந்த நெசவாளர்களுக்கான விருதும் இந்த சங்கம் தேர்வு பெற்றது.

பின்பு மாவட்ட இயக்குனராக ஈரோடு மாவட்ட அனைத்து கைத்தறி சங்கங்களின் சம்மேளனத்தில் பணியாற்றி உள்ளார்.

ஈரோடு மாவட்ட நூல் மற்றும் சாயக் கூலி நிர்ணயக்குழு கமிட்டி உறுப்பினராகவும் தமிழ்நாடு அரசு ஜவுளி ஆலோச னைக்குழு  உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளித்துறைச் சார்ந்த பல்வேறு சங்கங்களின் பணியாற்றியுள்ளார்.

ஈரோடு செங்குந்த திருமண மண்டபத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். பாக்ஸிங் அகாடமி துணைத் தலைவராகவும் உள்ளார்.  கொரானா காலக்கட்டத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் அனைத்து மளிகை பொருட்கள். மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் வழங்கினார்.

நலிந்தோருக்கு மருத்துவ உதவி, மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகள் விளையாட்டு உபகரணங்கள் தொடர்ந்து செய்து வருகிறார். இலவச இ சேவை மூலம் பொது
மக்களுக்கு பல்வேறு வகையான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தீர்வு செய்து கொடுத்தார் இவ்வாறான சேவைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் நந்தகோபால் மிகவும் பிரபலமாக உள்ளார்.

சங்கத்தின் தலைவராக எம்பி  நாச்சிமுத்து முதலியார், ஜெ.சுத்தானந்தம், ராணா ஆகியோர் வரிசையில் தற்போது என் நந்தகோபால் இடம்பெற்றுள்ளது மேலும் ஒரு மகுடமாக கருதப்படுகிறது. இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு பல்வேறு தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top