Close
நவம்பர் 21, 2024 11:19 காலை

குடியாத்தத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல சங்க ஆண்டு விழா! ஏ.சி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில், 30ம் ஆண்டு விழா குடியாத்தம் ஏரிக்கரை, ஜெ.எஸ்.கிரான்ட் பேலஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, தலைவர் எஸ்.இரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெ.சத்தியராஜ் அனைவரையும் வரவேற்றார். கௌரவ தலைவர்கள் வி.குமரேசன், டி.தேவா, எம்.அரிகிருஷ்ணன், ஆர்.தயாளன், எஸ்.வடிவேல், கே.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக, புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துக்கொண்டு இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்து, பேசினார். பின்னர், குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.செளந்தர்ராஜன் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் லைசென்ஸ் சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில், நகரமன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு, புதிய நீதிக்கட்சியின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் ஆர்.செந்தில், மாநில தொண்டரணி செயலாளர் பட்டு பாபு, நகர செயலாளர் ரமேஷ், நெசவாளர் அணி செயலாளர் அமர்நாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் இருசக்கர வாகன உதிரிபாக விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை பொருளாளர் என்.பாருக், துணை தலைவர்கள் மதியழகன், ரமேஷ், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top