Close
ஜூன் 30, 2024 3:43 மணி

பயன்பாட்டிற்கு வராத அங்கன் வாடி மையத்தை திறக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம், மாயாண்டி கோவில் தெரு அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம்.
இக் கட்டிடம் , அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள். அன்பரசன் மற்றும் லெட்சர்கான் கூறுகையில்: அங்கன்வாடி கட்டட பணிகள் குறித்த அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், சத்துணவு அங்கன்வாடி குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால், சோழவந்தான் செல்லும் பாதையில் உள்ள அங்கன்வாடிக்கு சாலையை கடந்து செல்ல குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த அங்கன்வாடி மையத்தை விரைவில் திறந்தால் அருகே இருக்கும் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே விரைவில் இக்கட்டத்தை திறந்து குழந்தைகளுக்காக செயல்படுத்த வேண்டும் என்று, வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை வைத்துள்ளார்..
மேலும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு விரைவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடியை, விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top