Close
நவம்பர் 14, 2024 4:23 மணி

மக்கள் குறைதீர்க்கும் நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : கலெக்டர் வழங்கினார்..!

நாமக்கல்லில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாளில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்:
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 34 பயனாளிகளுக்கு ரூ. 41.46 லட்சம் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 431 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தாட்கோ சார்பில், 18 பேருக்கு ரூ. 37.56 லட்சம் ரூபாய் மதிப்பில், தொழில் கடனுதவி, கூட்டுறவுத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ. 3.45 லட்சம் மதிப்பில், வட்டியில்லா பயிர்க்கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் சார்பில் நடத்தப்பட்ட, ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம் மற்றும் பராம்பரிய உணவு திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 8 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 23,000 பரிசு வழங்கப்பட்டது.

அதையடுத்து, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் உமா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 பேருக்கு, ப்ரெய்லி கை கடிகாரம், கல்வி உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மொத்தம் ரூ. 34 பேருக்கு 41.46 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top