Close
நவம்பர் 21, 2024 10:23 காலை

எடப்பாடி பழனிச்சாமி மீது உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு

அதிமுக – அமமுகவினர் இடையே நடந்த மோதலில் திமுகவினரை தொடர்பு படுத்தி சமூக வளைதளத்தில் அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டி – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு அளித்ததால் பரபரப்பு.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மங்கல்ரேவு பகுதியில் நேற்றைய முன்தினம் இரவு அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தைக் முடித்துவிட்டு திருமங்கலம் சென்று கொண்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் – யை தாக்க முயற்சி செய்து, உடன் வந்த அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் என்பவரை அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், நேற்று சேடபட்டி காவல் நிலைய போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து,
அமமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த குபேந்திரன் உள்பட 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர், இதில் 4 பேரும் நேற்றே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட X தள பதிவில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, திமுகவினரின் தூண்டதலின் பேரில் , இந்த சம்பவம் அரங்கேறியதாக பதிவு செய்திருந்தார்.
அதிமுக, அமமுக இடையே நடைபெற்ற பிரச்சனையில் திமுகவை தொடர்பு படுத்தி, களங்கம் விளைவிக்கும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட இந்த சமூக வளைதள பதிவை நீக்க கோரி, இன்று உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி செந்தில்குமாரிடம், திமுக மதுரை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை
யிலான திமுகவினர் புகார் மனு அளித்தனர்.
இந்த புகார் மனுவில் அதிமுக – அமமுகவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையில் திமுகவை தொடர்பு படுத்தி எடப்பாடி பழனிச்சாமி பதிவு செய்த சமூக வளைதள பதிவை நீக்க கோரியும், முதல்வரிடம் மன்னிப்பு கேட்க கோரியும், திமுக மீது சமூக வளைதளத்தில் அவதூறு பரப்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top