Close
நவம்பர் 21, 2024 4:08 மணி

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி கிராம சபைக் கூட்டம்

புதுக்கோட்டை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களில் வருகிற 23ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறும்.
இது குறித்த கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துகளிலும், உள்ளாட்சிகள் தினமான கடந்த நவ. 1ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வருகிற நவ. 23ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும், கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பொருட்கள்:

  • கிராம பஞ்சாயத்துக்களில் சிறப்பாக பணிபுரிந்தவர்களை சிறப்பிக்க வேண்டும்.
  • கிராம பஞ்சாயத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களை பாராட்டி கௌரவிக்க வேண்டும்.
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
  • தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் ஆகிய திட்டங்கள் குறித்தும் மற்றும் கூட்டத்தில் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்

என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top