Close
நவம்பர் 18, 2024 7:37 காலை

மருத காளியம்மன் கோவில் விழாவில் அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு

மருத காளியம்மன் கோவில் விழாவில் அமைச்சர் சக்கரபாணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக முகூர்த்தக்கால் நடும் விழாவில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம் பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழாவில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, பெரியூரில் பிரசித்தி பெற்ற மருதகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோயில் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் தூரன் குலம் மற்றும் பண்ணை குலத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். மேலும் தற்போதைய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் ஆகியோர் இக்கோயிலின் குடிப்பாட்டுதாரர்கள் ஆவார்கள்.

பழமை வாய்ந்த இந்த கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுடன், கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோயில் முன்புறம் 5 நிலைகளிகளில் ராஜகோபுரம், மூலவர் தங்க கோபுரம் மற்றும் பரிவார தொய்வங்களுக்கான கோபுரங்கள் மற்றும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் கோயில் திருப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தற்போது திருப்பணிகள் முடிவடையும் நிலையில், வருகிற 2025ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி காலை 7.26 மணிக்கு மேல் 9.20 மணிக்குள் மகா கும்பாபிஷேசேக விழாவை சிறப்பாக நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிசேக விழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் மருதகாளியம்மன் கோயில் திருப்பணி குழு தலைவர் பாலசுப்பிரமணியம், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, டாக்டர் பழனிவேலு, ராமசாமி, குமாரசாமி மற்றும் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கும்பாபிசேக விழா முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நøடெபற்றது. விழாவில் கொங்கு வேளாளர் சமூக பண்ணை குலம் மற்றும் தூரன் குல குடிப்பாட்டு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top