பொன்விழா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு, பள்ளி ஆசிரியர்கள் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் பொன்விழா நகர் அரசு நடுநிலைப் பள்ளியில், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களின் நலன் கருதி கூடுதல் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என, பள்ளி தலைமையாசிரியர் யோகலட்சுமி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பியிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சுகாதார வளாகம் அமைப்பதற்கு, எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், இடைநிலை ஆசிரியர் செல்வராணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.