Close
ஏப்ரல் 3, 2025 4:24 காலை

நாமக்கல் அருகே நடந்த இலவச மருத்துவ முகாமில் காய்கறி கண்காட்சி

காய்கறி கண்காட்சியை பார்வையிட்ட ராமலிங்கம் எம்எல்ஏ.

எர்ணாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில், ஊட்டச்சத்து காய்கறிகள் கண்காட்சியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து காய்கறி கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார்.

மருத்துவ அலுவலர் டாக்டர் மாலதி மற்றும் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டு,  102 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள், செய்து மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் வட்டார மருந்துகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாமக்கல் ஆட்மா தலைவர் பழனிவேல், மருத்துவ அலுவலர் சிவதர்சினி, சித்த மருத்து அலுவலர் பூபதிராஜா, சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராஜகணபதி, அப்துல் ரஜீன், பிடிஓ பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் மாரப்பன், நலங்கிள்ளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top