நாமக்கல் :
கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், தேவானூர் நாடு பரியூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு, விவசாயி. இவருக்கு பூங்காவனம், சரோஜா இரு மனைவிகள் உள்ளனர்.
மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். அவரது மகன் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். நேற்று இரவு தங்கராசு வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத ஆசாமிகள் இருவர் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தம்பதியினரைக் கயிற்றால் கட்டிப்போட்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் ரொக்கப் பணம், 3 செல்போன் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, புகாரின் பேரில் கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.