Close
டிசம்பர் 19, 2024 12:37 மணி

நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்

நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு, ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் திடீர் தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாநகராட்சியில் பணியிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இதில் 240 பேர் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர்.

இப்பணியாளர்கள் தூய்மைப் பணிகளை புறக்கணித்துவிட்டு மாநகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சார்பில், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பிடித்தம் செய்யப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது. எனினும் பி.எஃப் பிடித்தம் செய்யப்படுவதில்லை. இதுபோல் தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியாளர்கள் மீது காரணமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என புகார் எழுப்பினர்.
இக்கோரிக்கைளை நிறைவேற்றினால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் எனவும் தெரிவித்தனர். அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top