Close
ஏப்ரல் 3, 2025 1:19 காலை

ஓமன் நாட்டிற்கு 5 கோடி முட்டை ஏற்றுமதிக்கு நடவடிக்கை: ராஜேஷ்குமார் எம்.பி.க்கு பண்ணையாளர்கள் பாராட்டு

ஓமன் நாட்டிற்கு 5 கோடி முட்டை ஏற்றுமதிக்கு நடவடிக்கை எடுத்த, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரை, தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டால் இறக்கு முடியாமல் இருந்த சுமார் 5 கோடி முட்டைகளை இறக்குவதற்கு ஏற்பாடு செய்த ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாருக்கு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
நாமக்கல் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் முட்டைகள், கத்தார், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு திடீரென்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதனால் நாமக்கல்லில் இருந்து கண்டெயினர்கள் மூலம் கப்பலில் அனுப்பிய முட்டைகள் ஓமன் துறைமுகத்தில் இறக்காமல் நின்றது. இதனால் முட்டை ஏற்றுமதியாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், நாமக்கல் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து, ஓமன் நாட்டில் நாமக்கல் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாமக்கல் முட்டைகளை இறக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். இதனால் கோழிப்பண்ணையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இதையொட்டி தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பியை சந்தித்து, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top