Close
டிசம்பர் 27, 2024 7:58 மணி

பேருந்துகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்

வெறிச்சோடியுள்ள சோழவந்தான் பேருந்து நிலையம்

சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும் வருவதில்லை, பயணிகளும் வருவதில்லை. மயான அமைதியில் சோழவந்தான் பேருந்து நிலையம் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் ஒரு வருடம் முடியும் நிலையில், பல பேருந்துகள் பேருந்து நிலையம் வராததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, வாடிப்பட்டியில் இருந்து வரும் எந்த ஒரு பேருந்தும் பேருந்து நிலையம் உள்ளே வருவதில்லை அதே போன்று தனியார் பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வருவதில்லை.

ஒரு சில பேருந்துகள் தவிர எந்த பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வராததால் பயணிகளும் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை இதன் காரணமாக சோழவந்தான் பேருந்து நிலையம்  வெறிச்சோடி மயான அமைதியுடன் காணப்படுகிறது.
இதற்கு காரணமாக கூறப்படும் சோழவந்தான் மேம்பால பணிகள் முடிவடைந்திருந்தாலும், சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால்  பேருந்துகள் பேருந்து நிலையத்
திற்குள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக போக்குவரத்து கழக பணியாளர்கள் தெரி
விக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால், மட்டுமே பேருந்துகள் உள்ளே வந்து செல்ல முடியும். சில தினங்களுக்கு முன்பு சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளது.
இதை அதிகாரிகளும் சரி அரசியல்வாதிகளும் சரி கவனத்தில் கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளும் ஏனோ இது குறித்து எந்த ஒரு போராட்டத்தை நடத்தவும் தயாராக இல்லை.
சோழவந்தான் பேருந்து நிலையம் பொது மக்களுக்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. சோழவந்தானில் உள்ள அனைத்து கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் இதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இல்லையென்றால், சோழவந்தானின் ஒட்டுமொத்த மக்களின் கோபத்திற்கும் ஆளாக கூடிய நிலை வரும். விரைவில் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்காத அனைத்து கட்சியினரை கண்டித்து பொதுமக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும் என  கூறுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில், இரண்டு அமைச்சர்களான பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக எம்.பி. தங்க தமிழ் செல்வன் ஆகியோர் இருந்தும், சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வராது மிகவும் கவலை அளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரி உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top