மதுரை அலங்காநல்லூர் பகுதியில், தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் பட்டதாரி இளைஞர் அப்பா அம்மாவுக்கு உதவியாக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக பேட்டி அளித்தார்.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால், கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வெல்லம் தயாரிக்கும் பணிகள் தடைப்படுவதாக வெல்லம் தயாரிக்கும் உரிமையாளர்கள் பேட்டி கொடுத்தார். வெல்லம் தயாரிக்க தேவையான கரும்புகளை மேலூர் பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மெய்யப்பன் பட்டி, கோட்டைமேடு, கொண்டையம்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
10 கிலோ எடை கொண்ட வெல்லம் ஒரு மனு என்று சொல்லப்படுகிறது ஒரு மனு ரூபாய் 600க்கு விற்கப்படுவதாக கூறுகிறார்கள். அலங்காநல்லூர் பகுதியில், கரும்பு வரத்து குறைவாக இருப்பதால் மேலூர் பகுதிகளில் இருந்து கரும்பு வரவழைக்கப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுவதாக வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மெய்யப்பன்பட்டியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் பட்டதாரி இளைஞர் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து, அலங்காநல்லூர் அருகே மெய்யப்பன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கருத்த உடப்பன் கூறுகையில்,
பி எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளேன். வேலைக்கு முயற்சி செய்து கொண்டே அம்மாவுக்கு உதவியாக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன் .
அப்பா விவசாயம் பார்த்து வருகிறார். அப்பா, அம்மாவுக்கு உதவியாக வெல்லம் தயாரிக்கும் பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன். விவசாயத்தில் ஆர்வம் உள்ளதால் பணிகளுக்கு இடையே வெல்லம் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகிறேன்.
வெல்லம் தயாரிப்பதற்கு தேவையான கரும்பு டிராக்டர் மூலம் கொண்டு வரப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் கரும்பு சாறு பிழிந்து எடுத்து வைக்கப்படும். பின்பு கரும்புச் சாற்றை வெல்லம் தயாரிக்கும் தொட்டியில் கொட்டி சூடேற்றப்படும் பணிகள் நடைபெறும்.
அப்போது, மழை வந்தால் சூடு ஏற்றுவதற்கு தேவையான வெப்பம் கிடைக்காது சிரமம் ஏற்படும் . அது போன்ற நேரங்களில் வேலை தடைபடும்.
மற்றபடி வருடம் முழுவதும் வெல்லம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். பொங்கல் சமயங்களில் வெல்லம் டிமாண்ட் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கரும்பு அதிகமாக வரும் வேலையும் அதிகம் கிடைக்கும்
வெல்லத்தை நாங்கள் விற்பனைக்கு கொண்டு செல்வதில்லை. மொத்த விற்பனையாளர்கள் வெல்லம் தயாரிக்கும் இடத்திற்கு வந்து எடுத்துச் செல்வார்கள். 30 கிலோ கொண்டது ஒரு சிப்பம் கொப்பரைக்கு 80 கிலோ வெல்லம் உற்பத்தி செய்யப்படும் 12 மாதம் விளைவிக்கப்படும் கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கப்படும்.
வெல்லத்தைப் பொறுத்தவரை கிலோ கணக்கில் வராது மனு என்று சொல்லக்கூடிய கணக்கில் வரும் . மனு என்பது பத்து கிலோ. ஒரு மனு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்
பொங்கல் நேரம் என்பதால் 10 கிலோ வெல்லம் கொண்ட மனு 600 ரூபாய்க்கு விற்கப்படும் மற்ற சமயங்களில் 500 முதல் 550 அளவில் விற்பனை நடைபெறும் என்று கூறினார்
அலங்காநல்லூர் பகுதியில் 8 முதல் 10 கம்பெனிகள் செயல்படுகிறது . வெல்லம் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் கூறுகையில் , 50 ஏக்கர் மட்டுமே கரும்பு விவசாயம் அலங்காநல்லூர்பகுதியில் உள்ளது. தற்போது, கரும்பு விவசாயம் செய்ய முடியவில்லை.
விலை உயர்வை சமாளிக்க முடியாததால், கரும்பு விவசாயத்தை விட்டு விட்டு அனைவரும் வாழை விவசாயத்துக்கு சென்றுவிட்டனர்.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை ஓடாததால், கரும்பு வரத்து குறைவாக உள்ளது. இனிமேல் எந்த அரசு வந்தாலும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை ஓட்ட முடியாது.
அலங்காநல்லூருக்கு தேவையான கரும்புகள் மேலூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அரசாங்கம் சர்க்கரை ஆலையை ஓட்ட முடியவில்லை. வெல்லம் தயாரிக்கும் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆள் பற்றாக்குறை அதிகம் உள்ளது.
முன்பு கேரளாவில் இருந்து வந்து வெல்லம் எடுத்துச் செல்வார்கள். தற்போது, அந்தந்த மாவட்டங்களில் வெல்லத்தை எடுத்து சென்று விடுவதால், விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
வெல்லம் கமிஷன் கடை மதுரையில் 15 கடை இருந்தது தற்போது மூன்று கடைகள் மட்டுமே உள்ளது தொழில் நஷ்டத்தால் கடையை நடத்த முடியாமல் சென்று விட்டார்கள்.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையும் தொழிலாளர்களுக்கு விவசாயிகளுக்கு 15 வருட நிலவைத் தொகை பாக்கி உள்ளது. ஆகையால், ஆலையை இனி நடத்துவது சிரமம் .
ஆயிரம் டன் கரும்பு இருந்தால் தான் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க முடியும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 500 டன் கரும்பாவது தேவைப்படும்.
ஆனால், அலங்காநல்லூர் ஒன்றிய முழுவதும் அந்த அளவு கரும்பு உற்பத்தி இல்லாததால், சர்க்கரை ஆலையை இயக்க முடியவில்லை இவ்வாறு கூறினார்.