Close
ஜனவரி 9, 2025 6:47 மணி

தமிழக முதல்வருக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கக்கூட்டம்

திருக்குறளைப் போற்றும் வகையில், பல புதிய திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, செயலர் மகாசுந்தர், பொருளாளர் மு. கருப்பையா ஆகியோர் புதன்கிழமை (1.1.2025) வெளியிட்ட அறிக்கையில்,
திருக்குறளைப் போற்றும் வகையில், பல புதிய திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் பாராட்டுகிறது.
கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 25 -ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர், திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குக் கண்ணாடி இழை பாலத்தைத் திறந்து வைத்து, திருக்குறன் தொடர்பான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறன் பயிலரங்கள் தொடங்கவும், ஆண்டுக்கு 133 கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தவும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கடைசி வாரம் திருக்குறள் வாரமாகக் கொண்டாடவும், ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தவும் எனப் பல்வேறு திருக்குறள் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆகியோர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் உரித்தாக்குவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top