Close
ஏப்ரல் 24, 2025 11:31 காலை

மோகனூர் காவிரி ஆற்றில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றங்கரையில், ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு இன்று, ஏராளமான பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அமாவாசை தினம், தந்தை காரகன் சூரியனும், தாய் காரகன் சந்திரனும், ஒரே ராசியில் சந்திக்கும் போது ஏற்படுகிறது. 30 திதிகளில் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏற்ற திதி.

இந்த நாளில், நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி, அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து படையலிட்டு, எள்ளும் தண்ணீரும் அளித்து வழிபடுவார்கள்.

தை அமாவாசை தினத்தில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். இந்நாளில், முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். அதன்மூலம், நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.

அதன்படி, மோகனூர் காவிரி ஆற்றில், இன்று அதிகாலை முதல் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். எள், பச்சரிசி, தர்ப்பை வைத்து வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர். தொடர்ந்து, ஆற்றில் புனித நீராடினர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு பணியில், காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top