Close
பிப்ரவரி 23, 2025 11:08 காலை

பரமத்தி வேலூர் ராஜவாய்க்காலில் நாளை 22ம் தேதி தண்ணீர் நிறுத்தம்

பரமத்தி வேலூர் மோகனூர் வழியாக பாய்ந்து செல்லும் காவிரி பாசன வாய்க்காலான ராஜவாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக நாளை 22ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி தடுப்பணையில் இருந்து காவிரி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பரமத்தி வேலூர் மற்றும் மோகனூர் தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.

இந்த வாய்க்கால் மோகனூர் அடுத்த ஒருவந்தூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

ஆண்டுதோறும் இந்த வாய்க்கால் பிப்ரவரி மாதம் பொதுப்பணித்துறையினர் மூலம் தூர்வாரி பராமரிப்பு பணி செய்வதற்காக தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். இரு வார கால இடைவெளிக்குப் பின் வாய்க்கால் மீண்டும் திறக்கப்படும்.

இதையொட்டி, இந்த ஆண்டு நாளை 22ம் தேதி ராஜவாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது, என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராஜவாயக்கால் பாசன விவசாயிகள் கூறுகையில், ராஜவாய்க்கால் பராமரிப்புக்காக தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது. மார்ச் 16ம் தேதி மீண்டும் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். இந்தப் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top