தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 18 பெண் குழந்தைகள், 12 ஆண் குழந்தைகள் என மொத்தமாக 30 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் தங்க மோதிரம் மற்றும் தாய் சேய் நல உபகரணங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வழங்கினார்.
விழாவிற்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன். எம்.பி. கழக மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைசெயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதி கோல்டு. பிரபு அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 18 பெண் குழந்தைகள், 12 ஆண் குழந்தைகள் என மொத்தமாக 30 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் தங்க மோதிரம் மற்றும் தாய் சேய் நல உபகரணங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், 1938ஆம் ஆண்டிலிருந்து தாய் மொழியாம் தமிழைக் காக்க தொடர்ந்து திராவிட இயக்கம் போராடி வருகிறது. பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கு தமிழில் கற்க முடியும். இந்தியில் இதற்கான பாட திட்டங்கள் இல்லை.
மருத்துவக் கல்வியை ஆங்கிலத்தில் படித்தால்தான் எல்லா இடங்களிலும் மருத்துவராக பணியாற்ற முடியும். மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்தகங்களில், மருந்துகளின் பெயர் ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஆக எங்களுக்கு தாய் மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இரு மொழி என்று பேரறிஞர் அண்ணா சட்டமாக்கி தந்துள்ளார்.
அதனை தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பாதையில்தான் நடைபோட்டு வருகிறார்கள். மாணவர்கள் விருப்பப்பட்டால் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் அதற்கு எந்த தடையும் இல்லை. இருமொழிக் கொள்கை சட்டமாக உள்ள தமிழத்தில் மருத்துவம். பொறியியல் பயின்ற மாணவர்கள்தான் உலகமெங்கும் சென்று பணியாற்றி முத்திரை பதித்து வருகிறார்கள்.
மேலும், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை முறையாக கொடுக்க வேண்டும். இந்த மருத்துவமனை கருணாநிதி காலத்தில் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆட்சியில் இந்த மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படவில்லை. தற்போதுதான் இந்த மருத்துவமனைக்கு தேவையாக சி.டி.ஸ்கேன், கூடுதல் கட்டிடங்கள், மருத்துவர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என தெரிவித்தார் .
விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் மாலதி, மருத்துவர்கள் வெங்கடேஷ், பாலசந்தர், கதிர், மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, காலேஜ் கு.ரவி, ஏ.ஏ.ஆறுமுகம், விஜயராஜ், ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர். சந்திரன், ரமணன், ஆராஞ்சி ஆறுமுகம், மாநகராட்சி துணை மேயர் ராஜாங்கம், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.