மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத் திட்ட மாணவிகள் சார்பாக வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கு நெல் மற்றும் தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
இந்த பயிற்சி முகாமிற்கு, வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். மாணவி கீர்த்தனாஶ்ரீ வரவேற்றார்.
பயிற்சி முகாமில், மதுரை வேளாண் கல்லூரி பேராசிரியர் துறை தலைவர் ஆனந்தன், தோட்டக் கலைத்துறை பயிர் நோயியல் துறை பேராசிரியர் மாரீஸ்வரி , வேளாண்மை அலுவலர் தீபா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த பயிற்சி முகாமில், நெல்பயிரில் வரும் நோய்கள், களைகள், மற்றும் சத்து குறைபாடுகளை பற்றியும்,அவற்றை தடுப்பதற்கான வழிகள்,மகசூலை அதிகப்படுத்தும் வழிகள் குறித்தும்,தென்னை மரத்தில் வரும் பூச்சிகள்,நோய்கள்,சத்து குறைபாடுகளை கண்டறிவது பற்றியும் அதை எவ்வாறு குறைப்பது பற்றியும். இயற்கை விவசாயத்தை மேம்படுத்தல் பற்றியும் உயிர் உரம் இடுதல் பற்றியும்நிலத்தில் வரும் அழுகல்நோய் பற்றியும் உயிர் உரங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இக்கூட்டத் தில் உழவர் உற்பத்தியாளர் குழுதலைவர் ஜெயரட்சகன் தலைமையில் விவசாயிகள் கிருஷ்ணன், ஜெகதீசன்,சுரேஷ், அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமினை ஏற்பாடுகளை செய்த விவசாயக் கல்லூரி மாணவிகள் கீர்த்தனா ஶ்ரீ, கீர்த்தனாதேவி கீர்த்தீஷ்வரி, கீர்த்தி , கிருபாஷினி, கோமளவள்ளி, கிருஷ்ணவேணி, லட்சுமி கணேஷ்வரி ஆகியோர்
விதை நேர்த்தி செய்வது பற்றி செயல்முறை விளக்கமும், கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவ திட்டத்தில் உருவாக்கப்பட்ட செயல் விளக்க படங்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.
முடிவில் மாணவி லட்சுமி கணேஸ்வரி நன்றி கூறினார்.