Close
ஜூன் 5, 2025 3:00 மணி

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா: அமைச்சர், எம்.பிக்கள் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு, திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., மாலை அணிவித்தார். அருகில் அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட செயலாளர் ரஜேஷ்குமார், எம்.பி., எம்எல்ஏ ராமலிங்கம்

நாமக்கல்லில் நாளை நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா, அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின், 102வது பிறந்த நாள், தமிழகம் முழுவதும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கருணாநிதியின், 102-வது பிறந்த நாள் விழா, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள செலம்பகவுண்டர் பூங்காவில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமை வகித்தார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., விழாவில் கலந்துகொண்டு கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

பின்னர், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 120 திமுக மூத்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருச்சி சிவா எம்.பி., வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோவன், நாமக்கல் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம், நகரம், டவுன் பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திமுக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top