தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மகளிர் பணிபுரியும் விடுதி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு 13.07.2023 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டைரோடு மேல வஸ்தா சாவடி தெற்குத் தெரு என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.
இந்தவிடுதி பல்வேறு ஊர்கள்,மாவட்டங்கள்,மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள்,பயிற்சிக்காக வருபவர்கள்,பணி நிமித்தமாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கும் மகளிர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட சிறப்புமுயற்சி ஆகும். தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த சேவைகளைத் தரும் இந்த விடுதிக்கு“தோழி”என்று பெயரிடப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டைரோடு, மேலவஸ்தாச் சாவடி,தெற்குத் தெரு என்ற இடத்தில் 13.07.2023 அன்று முதல் செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியில் 60 படுக்கைகள் கொண்ட படுக்கை அறைகள் உள்ளது.
மேலும் தங்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் பணிபுரியும் பெண் விடுதி மேலாளர் மற்றும் 24 மணிநேரமும் பணிபுரியும் 2 பாதுகாப்பு காவலர், 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி,பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் உள் நுழைவு வசதி உள்ளது.
மேலும் விடுதியில் சுத்தமான குடிநீர் வசதி, அயனிங் வசதி, துணி துவைப்பதற்கு வாஷிங் மெஷின் வசதிஉள்ளது.மழை காலங்களில் பெண்களுக்கு ஏதுவாக குளிப்பதற்கு கெய்சர் வசதி 24 மணி நேரமும் இலவச வை-பை வசதி, பார்க்கிங் வசதி, அறைகளை சுத்தம் செய்யவும், சுகாதாரமான கழிப்பறை வசதிகளை பராமரிக்கவும் 2 பெண் பணியாளர்கள் உள்ளனர். மேலும் சுகாதாரமான காற்றோட்ட வசதி உள்ளது. இவை அனைத்தும் மிக குறைந்த வாடகையில் கிடைக்கிறது.
விடுதியில் 2 பேர் தங்கும் வசதி, 4 பேர் தங்கும் வசதிஉள்ளது. 2 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறை ரூ.3500- க்கும் 4 பேர் தங்கும் வசதிகொண்ட அறைரூ.2500- க்கும் என குறைந்த வாடகையில் அமைந்துள்ளது. இது விடுதி போன்று இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கான இல்லமாக செயல்படுகிறது.
விடுதியில் தங்கும் சேவையைப் பெற பயனர்கள் www.tnwwhcl.in -என்ற ஒருங்கிணைந்த இணைய தளத்தின் மூலம் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.