Close
நவம்பர் 21, 2024 11:21 காலை

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

தஞ்சாவூர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை

தஞ்சாவூர்   மாவட்டத்தில்  வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவ மழை- 2023 எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான மாவட்டபேரிடர் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் .தீபக் ஜேக்கப் தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  பேசியதாவது : தமிழகத்தில் வடகிழக்குபருவமழை 01.10.2023 முதல் தொடங்கியுள்ளதால், இதனை எதிர்கொள்வது தொடர் பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள மாவட்ட பேரிடர் மேலாண் மை குழு கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு,அதில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர் களை நியமித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணித்திட வேண்டும்.

மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலை பேசி எண்: 1077 உள்ளது. வருவாய்த் துறையினர் தலைமையில் மண்டல அளவில் குழுக்கள்  நியமித்து, ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கக் கூடிய பகுதிகளை தொடர்புடைய அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும்.

பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள்,மருத்துவத் துறைமற்றும் பொது சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கால்நடை பராமரிப்புத் துறை,

மீன்வளத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்புத்துறை ஆகிய அனைத்துத் துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நிவாரணப் பணிகளை எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிர் சேதம், கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

மேலும் அனைத்துத்துறை அலுவலர்களும் வடகிழக்கு பருவமழை 2023 –ஐ  எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும்  இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்திருப்பின் அல்லது சேதமடைந்திருப்பின் அதனை சரி செய்திடவும் மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை மின்சார வாரிய உதவி மைய கைப்பேசி எண்: 9498486899– க்கு வாட்ஸ் அப்பில் 24 மணி நேரமும்  பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்,  நீர் வளத்துறை அலுவலர்கள்,அனைத்து வருவாய் கோட்டாட்சி யர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top