தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறும் என்று சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் மானியக்கோரிக்கைகள் விவாதம்: சட்டப்பேரவையில் மார்ச் 23 -ஆம் தேதி, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்படுகிறது .
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்குகிறது.
மார்ச் 29 – காலை.. நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மாலையில்.. இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வைதுறை, போக்குவரத்து துறை தொடர்பான விவாதம் நடக்கிறது.
30 -ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,
31 -ஆம் தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.
ஏப்ரல் 1-ஆம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் பொதுப்பணித்துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த விவாதம் நடக்கிறது.
2 -ஆம் தேதி அரசு விடுமுறை.
3 -ஆம் தேதி பேரவை கூட்டம் இல்லை.
4 -ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை.
ஏப்ரல் 5 -ஆம் தேதி வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் துறை சார்ந்த விவாதம் நடக்கிறது.
6 -ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
7 -ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை,
8 -ஆம் தேதி அரசு விடுமுறை,
9 -ஆம்தேதி அரசு விடுமுறை,
10 -ஆம் தேதி காலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, தமிழ் வளர்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாலையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு. வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திர பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
ஏப்ரல் 11 -ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல்,
12 -ஆம் தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, மாலையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
13 -ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனம், மாலையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் கிராமத்தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள்,
14 -ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அரசு விடுமுறை..
15, 16 அரசு விடுமுறை,
17 -ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,
18 – ஆம் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
19 -ஆம் தேதி சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை, மாலையில் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றங்கள்.
20 -ஆம் தேதி காவல் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை, தீயணைப்புத்துறை.
21-ஆம் தேதி காவல், தீயணைப்புத்துறை மீதான விவாத்திற்கு,முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை மற்றும் அறிவிப்புகள், அரசினர் சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றலும், ஏனைய அரசினர் அலுவல்கள்.
பேரவை காலையில் 10 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் கூடுகிறது.
மானியக் கோரிக்கையில் மாற்றம்:
தமிழக சட்டசபை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 -ஆம் தேதி வரை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் 2 மாற்றங்களை சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு நேற்று அறிவித்தார். அதன்படி ஏப்ரல் 6 -ஆம் தேதி காலை நடை பெற இருந்த வருவாய்த்துறை மானியக் கோரிக்கை ஏப்ரல் 10 -ஆம் தேதி காலைக்கு மாற்றப்பட்டுள் ளது. ஏப்ரல் 10 -ஆம் தேதி நடத்த திட்டமிட்ட தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை ஏப்ரல் 6 -ஆம் தேதி காலையில் நடைபெறும்.