சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்து திமுக சார்பில் வாகன பேரணி நடத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 -ஆ வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 -ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு குறித்து ஒருங்கிணைந்த திமுக முன்னாள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜானகி கோபால் தலைமையிலான திமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.
கலைக் குழுவினரின் பாரம்பரிய இசை, பறையாட்டம், மயிலாட் டம், போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் வாகன பேரணி நடந்தது .கோபி கரட்டூர் ஆர்ச்சில் துவங்கிய இந்த வாகன பேரணி ஈரோடு பஸ் நிலையம்,சத்தி ரோடு வழியாக லா. கள்ளிப்பட்டி பிரிவு வரை சென்றது .
இந்த நிகழ்ச்சியில், நிர்வாகி சரத், தன்னார்வலர் வெற்றி, கவுன்சிலர் குமார சீனிவாசன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர் மூணாம்பள்ளி வெங்கடேஷ், முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரபு, கோபி பிரபு, ஜான்பாஷா,
தனபால், முன்னாள் கலை இலக்கிய பேரவை தென்றல் ரமேஷ், அளுக்குளி பாலு கே என் பாளையம் சின்னசாமி, முன்னாள் பேரூர் கழக செயலாளர் மணி, எலத்தூர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கள்ளிப்பட்டியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.