திமுக செயற்குழு கூட்டம், கவுந்தப்பாடி பாவா மண்டபத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நடந்தது.
இதில், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு சென்றடையவில்லை என குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில்,கவுந்தப்பாடி யில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது இந்த கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகளையோ மூத்த நிர்வாகிக ளையோ அழைப்பு விடுக்காமல் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
திமுக சட்ட விதிப்படி மாநில நிர்வாகிகள் மூத்த நிர்வாகி களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் இது போன்ற அழைப்பு விடுப்பதில்லை. நெருங்கும் நேரத்தில் இவ்வாறு நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவது வருத்தமளிக் கிறது.
மேலும் இது போன்ற செயல்கள் தொடருமானால் தேர்தல் பணியில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதை கட்சித்தலைவர் கவனம் செலுத்தி இடைவெளியை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.