Close
நவம்பர் 22, 2024 11:42 காலை

பொங்கல் திருநாளுக்காக விற்பனைக்கு வந்துள்ள பித்தளை, செம்பு பானைகள்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டையிலுள்ள கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள பித்தளை, செம்பு பொங்கல் பானைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பொங்கல் பண்டிகை கொண்டாட வெண்கலப் பானை,  செம்பு பானை மற்றும் பித்தளை பாத்திரங்களை  பொதுமக்கள்  ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை  நிகழ் ஆண்டில்  15.1.2024  -ஆம்  தேதி (திங்கள்கிழமை) கொண்டா டப்படுகிறது. .இந்த ஆண்டில் வழக்கமான உற்சாகத்துடன் .  பொங்கல் விழா கொண்டாட்டங்கள்  களை கட்டியுள்ளன.   .

15-ஆம் தேதி  பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி  மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், 17 -ஆம் தேதி 0உழவர் திருநாள் என்று  வரிசையாக பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி புதுமண தம்பதியருக்கு தலைப்பொங்கல் சீர்வரிசை வழங்கும் வழக்கம்  இருந்து வருகிறது.  இதில் புதுமண தம்பதியருக்கு புத்தாடைகள், தங்க நகைகள், சீர்வரிசை பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் பண்டிகை கொண்டாட குத்துவிளக்கு, செம்பு பானை, உருண்டை பானை, நாழி, உழக்கு, குத்துப்போணி, பூஜை பொருட்களான மணி,  காமாட்சி விளக்கு, தூபக்கால் போன்றவற்றையும், கரும்பு, மஞ்சள், வாழைத்தார் போன்றவற்றையும் வழங்குவது வழக்கம்.  இதனால், புதுக்கோட்டையிலுள்ள பாத்திரக்கடைகளில்  மக்கள் தங்களுப்பிடித்த உலோகத்தால் தயாரிக்கப்பட்ட  பொங்கல் பானைகளை வாங்கிச்சென்றனர்.

புதுக்கோட்டை
புதுகை கவிதா மெட்டல் கடையில் குவிந்துள்ள பொங்கல் பானைகள்

புதுக்கோட்டைதெற்கு 4 -ஆம் வீதியிலுள்ள  ஸ்ரீ கவிதா மெட்டல் பாத்திரக்கடை நிர்வாகி ஆர்.முருகேசன் கூறுகையில், சென்ற ஆண்டைவிட   இந்த ஆண்டில்பித்தளை   பொங்கல் பண்டி கைக்கான பாத்திர வகைகளை  பொதுமக்கள் ஆர்வத்துடன்   வாங்கிச் செல்கின்றனர் .

தற்போது  சுமார் செம்பு பானை கிலோ ரூ.1300 வரை விற்பனை செய்யப்படுகிறது. பித்தளை பானைகள் கிலோ ரூ.900 வரையிலும், பித்தளை  பாத்திரங்கள் 1 கிலோ ரூபாய் 600 -க்கு விற்பனை செய்கின்றோம்.

பாத்திர வகைகள், கும்பகோணம், திருநெல்வேலி மதுரை திருப்பூர் பகுதிகளில் இருந்து வந்து குவிந்துள்ளன. சில்வரில்   வர்ணம் பூசப்பட்ட பாத்திர வகைகள் 1 கிலோ ரூபாய் 400 க்கும் விற்பனை செய்கின்றோம்.

மேலும் உள்ளூரிலும் பாத்திர வகைகள் தயார் செய்யப்பட்டு அதுவும் விற்பனையில்  உள்ளது . இதனை போன்று எவர்சில்வர் பாத்திர வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருவதால், பொங்கல் சீர்வரிசை பாத்திர வகைகளை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கடைகளில் மக்கள்  கூட்டம் அதிகரித்துள்ளது. குடும்பம், குடும்பமாக வருகை தந்து பாத்திர வகைகளை வாங்கி செல்கின்றனர். பாத்திர கடைகளில் சிலவற்றில் பொங்கல் பாத்திர வகைகள் செட் மொத்தமாக விலை நிர்ணயம் செய்தும் விற்பனை செய்யப்படுகிறது   என்றார் அவர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top