Close
நவம்பர் 24, 2024 12:22 காலை

வீசானம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் வயல் தின விழா..!

நாமக்கல் அருகே வீசானம் கிராமத்தில் நடைபெற்ற, வயல் தின விழாவில், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்த விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

நாமக்கல்:
வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது.

நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் ஆராய்ச்சி -விரிவாக்கம், வயல் தினவிழா மற்றும் கிசான் கோஸ்தீஸ் திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்து பேசியதாவது: பருத்திப்பயிரில் காய்ப்புழுத் தாக்குதலின் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் முறைகள், கடைபிடிக்க வேண்டிய விதைதேர்வு, விதைநேர்த்தி, மண்பரிசோதனையின் படி உரமிடல் பயிர் சுழற்சி, கோடைஉழவு, பொருளாதார சேதார நிலையை பார்த்து பூச்சிகொல்லி, பூஞ்சான கொல்லி பயன்படுத்துதல், நீர்மேலாண்மை, அறுவடை பின்செய் நேர்த்தி போன்ற காரணிகளை பயன்படுத்தி குறைந்த வேலையாட்கள், குறைந்த முதலீடு அதிக மகசூல் அதிக லாபம் பெறும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழக மண்ணியல் துறை ஓய்வுபெற்ற விஞ்ஞானி, அப்பாவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மண்வகைகள், மண்வளம் குன்றுவதற்கான காரணங்கள், குறைந்த மண்ணின் ஈரப்பதம், களர் மற்றும் உவர் தன்மை மேல் மண், அடி மண் இறுக்கமும் அதன் நிவர்த்தி முறைகளும், நிலவளமேலாண்மை, மண்வள மேலாண்மை, தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை, பராம்பரிய வேளாண்மை, பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர்களின் நன்மைகள், மூடாக்கு போடுதல், பாரம்பரிய விதைகள், தொழில்நுட்ப கருவிகள் கொண்டு தரிசு நிலங்களை மேம்படுத்தல் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சியளித்தார்.

பயிற்சியில் பேராசிரியர் ரவிசங்கர், உழவியல் துறை பூவரசன், வேளாண்மை அலுவலர் மோகன், அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் பருத்தி பயிருக்கு பூச்சிக் கொல்லி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்து தெளிப்பு குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், வேளாண்மைத்துறையின் கருத்து கண்காட்சி நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top