Close
நவம்பர் 22, 2024 4:45 காலை

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக மதுரையில் பிரமாண்டமான தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்

மதுரை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 1000 மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்ற பிரமாண்டமான தேர்தல் விழிப்புணர்வு ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது.

பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின்படி பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சங்கீதா  தலைமையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்ற பிரமாண்டமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் இந்நிகழ்வில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற ஒருங்கிணைந்த முயற்சியுடன் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறையை ஊக்குவிப்பதற்காகவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதற்காகவும் துணிப் பைகள் விநியோகிக்கப்பட்டது.

மதுரையில் உள்ள சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட துணி பைகளில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த செய்திகளும் காட்சிப்படுத்தப் பட்டது

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top