Close
நவம்பர் 14, 2024 4:54 மணி

கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் சரக்கு லாரி மீது மோதி பயங்கர விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் சென்னை-அம்பத்தூரில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி சென்ற ஈச்சர் லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஈச்சர் லாரி ஓட்டுநர் பூந்தமல்லி நசரத்பேட்டையை சேர்ந்த நாகராஜ் ( வயது 52) என்பவர் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈச்சர் லாரியின் முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஓட்டுநர் ஆந்திர மாநிலம் வைசாத்தைச் சார்ந்த லட்சுமணன் (56) என்பவர்.

இவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் மோதியதில் ஓட்டுனர் லட்சுமணன் அவரது லாரியின் இடுக்கில் சிக்கி தவித்தார்.

தகவல் அறிந்து வந்த சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் லாரியின் இரும்பு சட்டங்களை இரும்பு அறுப்பான் மூலம் அறுத்து சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

ஓட்டுனர் லட்சுமணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த மற்றொரு லாரி ஓட்டுநர் நாகராஜின் உடலை மீட்கும் பணியில் சிப்காட் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு இரண்டு லாரிகளையும் தனித்தனியாக பிரித்து உயிரிழந்த நாகராஜன் உடலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சிப்காட் போலீசார் சீர் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top