Close
நவம்பர் 18, 2024 8:20 காலை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் அமைசச்ர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

திருச்சி அருகே வாக்காளர்  பட்டியல் சிறப்பு திருத்த முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஆய்வு செய்தார்.

தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் நவம்பர் 16 ,17 , மற்றும் 23,  24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் உரிய ஆவணங்களை காட்டி தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தனது தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, காட்டூர் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி கிழக்கு தொகுதி சஞ்சீவி நகர் சமுதாயக்கூடம் உட்பட்ட இடங்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்களை பார்வையிட்டு  நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அப்போது அவர் திமுக  நிர்வாகிகளுடன் எவ்வாறு பணி செய்வது என்பது குறித்தும்  அறிவுறுத்தினார். அதிகாரிகளிடம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த முகாமில் இன்று சுமார் 75 பேர் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் மாற்றுதல் பெயர் மாற்றுதல், ஆகியவைகளை திருத்திக் கொண்டனர்.

மேலும் இந்த ஆய்வின்போது திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான மதிவாணன், பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், சிவக்குமார், மற்றும் பாக முகவர்கள், வட்ட கிளைகழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top