Close
நவம்பர் 18, 2024 5:59 காலை

சிவகங்கையில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் வருகின்ற 19.11.2024 அன்று தமிழ்நாடு சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் மேற்கொள்ளவுள்ளார்  என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர்  சொ.ஜோ.அருண்  வருகின்ற 19.11.2024 (செவ்வாய்கிழமை) அன்று சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், சிறுபான்மையினருக்கென , தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, ஆலோசனை மற்றும் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் கூட்டம் மேற் கொள்ளவுள்ளார்.

எனவே, சிறுபான்மையினருக்கான, கல்வி நிறுவனஙங்களின் பிரதிநிதிகள் மற்றும சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் அனைவரும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர்
நல மேம்பாட்டிற்கானதக்க கருத்துக்களையும், மாநில சிறுபான்மையினர் ஆணையக்
குழுவினரை சந்தித்து, கருத்துக்களை தெரிவித்துபயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top