Close
நவம்பர் 22, 2024 2:14 மணி

முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

கலசத்துக்கு புனித ஈர் ஊற்றும் சிவாசார்யர்கள்

காரியாபட்டி அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிராமத்தின் முதல் தெய்வமாக கருதப்படும் அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப்பிறகு , மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, மங்கல இசை விக்னேஸ்வரர் பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப பூஜை, ஸ்பர்ஷாஹூதி, பிம்பா ஹூதி, யாக சாலையில் திரவியா ஹூதி, பூர்ணா ஹூதி நடைபெற்று, கடங்கள் புறப்பாடு ஆகி வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது..
பக்தர்களுக்கு புனித நீர் தெளித்த பின்பு கர்ப்ப கிரகத்தில் இருக்கும் முத்தாலம்மனுக்கு,மகா கும்பாபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாதாரனை நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top