Close
நவம்பர் 22, 2024 3:22 மணி

வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்து நாமக்கல்லில் விளக்க கூட்டம்..!

நாமக்கல்லில் நடைபெற்ற வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்த விளக்க கூட்டத்தில், ஈரோடு பிரிவு வருமான வரித்துறை ஜாயிண்ட் கமிஷனர் ஸ்ரீநிவாஸ்கண்ணா பேசினார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் வருமான வரித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் வருமான வரித்துறையின் புதிய விவாத் சே விஸ்வாஸ் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருமான வரித்துறை ஈரோடு பிரிவு ஜாயிண்ட் கமிஷனர் ஸ்ரீநிவாஸ்கண்ணா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.

அப்போது, சமீபத்தில் வருமான வரித்துறையால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள, நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகள் தொடர்பான சர்ச்சைகளை விரைந்து தீர்க்க, நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம் குறித்து விளக்கி கூறினார்.

மேலும், வருமான வரி செலுத்துவோர் கணக்குகளை முறையாக பராமரிப்பதன் அவசியம், வரியை குறித்த காலத்தில் செலுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த திட்டம் குறித்த சந்தேகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

முன்னதாக நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்ஸ் அசோசியேசன் தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்றார். வருமான வரித்துறை ஈரோடு பிரிவு துணை கமிஷனர் மணிகண்டன், ஆடிட்டர்கள் சங்க செலாளர் செல்வராஜூ, நாமக்கல் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் திரளான தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top