நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரியத்தின் சார்பில் மாதாந்திர குறைதீர் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் மின் விநியோகம் சம்மந்தமான குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வுகாண, ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வருகிற 4ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும். 11ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பரமத்தி வேலூர் வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 21ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 26ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
மின்சார விநியோகம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், முகாமில் நேரடியாக கலந்துகொண்டு, மேற்பார்வை பொறியாளரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.