Close
டிசம்பர் 12, 2024 4:41 மணி

சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர்கள் சேதம்: கலெக்டர் நேரில் ஆய்வு

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தோட்டமுடையான்பட்டி கிராமத்தில், விவசாய தோட்டத்தில், பலத்த மழையால் சேதமடைந்த வாழை மரங்களை, நாமக்கல் கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரிய குளம் பஞ்சாயத்து, பட்டத்தையன் குட்டை கிராமத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட, விவசாய நிலங்களில் பயிர் சேதம் குறித்து கலெக்டர் உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் 4 விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் நெற்பயிர். 7 விவசாயிகளுக்கு சொந்தமான 12 ஏக்கரில் பருத்தி பயிர் மற்றும் 3.5 ஏக்கரில் 2 விவசாயிகளின் கரும்பு பயிர் என மொத்தம் 13 விவசாயிகளுக்கு சொந்மான சுமார் 25.5 ஏக்கரில் பயிர் சாகுபடி மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, பெரியகுளம் தடுப்பணை மற்றும் பழைய பாளையம் ஏரியில் கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதையும், கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நீர் பிடிப்பு பகுதிகளின் மழை அளவு, தற்போதைய நீர் வரத்து உள்ளிட்ட விவரங்களை நீர்வள ஆதார துறையினரிடம் கேட்டறிந்தார். மேலும் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பவித்திரம்புதூர் பஞ்சாயத்து, தோட்டமுடையான்பட்டி கிராமத்தில் 10 விவசாயிகள் 12.86 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் மழையால் சேதமடைந்துள்ளதை கலெக்டர் பர்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளில் வேளாண்மை இணை இயக்குநர் கலைச்செல்வி, துணை இயக்குநர் கவிதா, தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top