Close
டிசம்பர் 27, 2024 7:15 காலை

சைபர் கிரைம் மோசடியில் இழந்த ரூ.9.59 லட்சம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

சைபர் கிரைம் வழக்குகளில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட ரூ. 9.59 லட்சம் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.
ராசிபுரம் அருகே வெண்ணந்தூரைச சேர்ந்தவர் தமிழ்நேசன். இவர் போலி போதைப்பொருள் பார்சல் மூலம் ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 336ஐ சைபர் கிரைம் மோசடியில் இழந்தார்.

இதுபோல் ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் போலி கொரியர் மோசடி மூலம் ரூ.81 ஆயிரத்து 676 ரொக்கப்பணத்தை இழந்தார்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் இழந்த தொகையை போலீசார் மீட்டனர்.

இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைபர் கிரைம் மோசடியில் பணத்தை இழந்த இருவரிடமும் அத்தொகையை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வழங்கினார்.
மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள், உடனே 1930 என்ற எண்ணிற்கு புகார் செய்ததால் இழந்த பணம் மீட்கப்பட்டது. எனவே சைபர் மோசடியில் பணத்தை இழந்தால் உடனடியாக, பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்ய வேண்டும். அல்லது cyvercrime.gov.in என்ற வெப்சைட்டிலும் ஆன்லைன் மூலம் உடனடியா புகாரை பதிவு செய்ய வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top