Close
மே 21, 2025 4:01 காலை

அலங்காநல்லூர் பேரூராட்சியில்புதிய சமுதாயக்கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்ட பூமி பூஜை: எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை, கிராமத்தில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் குறவன்குளம், அலங்காநல்லூர், வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.ஒரு கோடியை 51 லட்சம் மதிப்பீட்டில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சிகளி்ன் உதவி இயக்குநர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், நகர் செயளாலர் ரகுபதி, செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி துணைத் தலைவர் சுவாமிநாதன் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் பஞ்சு அழகு, பாலமேடு பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், பொருளாளர் சுந்தர், ஒப்பந்ததாரர் கண்ணன், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பேரூராட்சி கவுன்சிலர் சுகப்பிரியா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top