Close
ஜனவரி 31, 2025 11:01 மணி

பொன்னேரி அருகே துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டட திறப்பு விழா: அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது

பொன்னேரி அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்காமல் யாரை வைத்து அமைச்சரிடம் தேதி வாங்கினீர்கள் என வேளாண் அதிகாரியை திமுக நிர்வாகி மிரட்டியதால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.ஜே.கோவிந்தராஜன் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே ஆரணி பேரூர் கழக திமுக பொருளாளர் கரிகாலன் உதவி வேளாண் அலுவலர் ரமேஷை மிரட்டியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. திமுக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்காமல் எப்படி அமைச்சரிடம் தேதி வாங்கினீர்கள் எனவும், 15 ஆண்டுகளாக கட்சிக்காக வேலை பார்த்து வருவதாகவும் யாரிடமும் சொல்லாமல் எப்படி நிகழ்ச்சி நடத்துவீர்கள் என வேளாண் துறை அதிகாரியை திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்தார்.

திமுக நிர்வாகி மிரட்டல் விடும்போது உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் பதில் ஏதும் பேச முடியாமல் அமைதியாக நின்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top