Close
ஜனவரி 30, 2025 9:39 மணி

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பிப்ரவரி மாதம் இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி மாதம் நாட்டுக்கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக் கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. கோழிவளர்ப்பு மூலம் தங்களது குடும்பத்திற்கான முட்டை மற்றும் இறைச்சி தேவைகளை பூர்த்தி செய்வதோடு, விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடு அடைந்துவருகின்றனர்.

கோழி வளர்ப்பு ஊரகப் பகுதிகளில் உபயோகமற்ற தானிய மிகுதிகளிலும், நிலத்தில் கிடைக்கக் கூடிய அதன் உணவு வகைகள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.

கோழிகளை எளிதாக பாதிக்கக் கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அரசு கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்ப்டடு வருகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கோழிநோய் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு, பிப்ரவரி முதல் மற்றும் 2ம் வாரம் 1.02.2025 முதல் 14.02.2025 வரைகோழிக் கழிச்சல்நோய் தடுப்பூசிப்பணி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

மேற்கண்ட நாட்களில் கால்நடை மருந்தகங்களில் நடைபெறும் முகாம்களில், பொதுமக்கள் தங்களது கோழிகளுக்கு இலவசமாக கோழி நோய் தடுப்பூசி மருந்தினை செலுத்தி பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top