Close
மார்ச் 4, 2025 7:00 மணி

பிளஸ்டூ மாணவி தற்கொலை..! தேர்வு பயமா? போலீசார் விசாரணை..!

கோப்பு படம்

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் பனிரெண்டாவது வகுப்பு மாணவி மர்மமான முறையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் ஜெயா நகர், பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்-திவ்யா, தம்பதியர். இவர்கள் கடந்த 02ம் தேதி அன்று வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு இரவு 09.00 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது மகள் பிரியா, 03ம் தேதி நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பரீட்சைக்காக அறையில் தனியாக படித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனைவரும் தூங்க சென்றதாகவும், 03ம் தேதி அதிகாலை 05.20 மணியளவில் மாணவி பிரியாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர், அவரது அறைய திறந்து பார்த்தபோது அங்கே அவர் காணவில்லை. வீட்டின் மொட்டை மாடியில் சென்று பார்த்தபோது மாணவி பிரியா, உடல் முழுவதும் எரிந்து நிலையில் கிடந்ததாகவும்,

அவரது பெற்றோர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் KMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 3ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி மாணவி பிரியா, உயிரிழந்துள்ளார்.

இது குறித்து திருவள்ளூர் டவுன், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவி மர்மமான முறையில் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடமும் மாணவியரின், பெற்றோர்களிடமும் காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் படிக்கும் பள்ளி மாணவிகள் தொடர்ந்து இதுபோன்று முறையில் தற்கொலை செய்து கொள்வது ஒரு தொடர்கதையாக அரங்கேற்றி வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top