Close
மே 10, 2025 1:32 காலை

திருவண்ணாமலையில் தொழில்பழகுநா் சோ்க்கை முகாம்..!

கோப்பு படம்

திருவண்ணாமலையில் வருகின்ற 13-ஆம் தேதி நடைபெற உள்ள தொழில்பழகுநா் சேர்க்கை முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை கம்பன் தனியாா் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம், செய்யாறு சா்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட தொழில்பழகுநா் பயிற்சிக்கான 100-க்கும் மேற்பட்ட நபா்களை தோ்வு செய்ய உள்ளன.

என்.சி.வி.டி., மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில் அரசு, தனியாா் ஐடிஐ-களில் 2024-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்ற அல்லது 2024-ஆம் ஆண்டுக்கு முன்னதாக தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.

ஐடிஐயில் சோ்ந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டயம், பட்டம் முடித்தவா்கள் நேரடியாக தொழில்சாலைகளில் ஊழ்ங்ள்ட்ங்ழ் அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங் -ஆக சோ்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழில்பழகுநா் பயிற்சியும் பெற்று தேசிய தொழில்பழகுநா் சான்றிதழ் பெறலாம்.

தொழில்பழகுநா் பயிற்சிக்கு பிறகு ஈஎப (ஈண்ழ்ங்ஸ்ரீற்ா்ழ் எங்ய்ங்ழ்ஹப் பழ்ஹண்ய்ண்ய்ஞ்)-ஆல் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் தொழில்பழகுநா் தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெறுபவா்களுக்கு தேசிய தொழில்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்து, அதன் விவரத்தை அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top