Close
செப்டம்பர் 20, 2024 8:51 காலை

புதுகை நகராட்சி 26 வது வார்டு அதிமுக வேட்பாளர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி  26 -ஆவது வார்டில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்   . துளவத்தாமம் கலியமூர்த்தி    தனது வார்டில்  இறுதிக்கட்ட பிரசாரத்தை வியாழக்கிழமை  வாக்கு சேகரித்து நிறைவு செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்  26 -ஆவது வார்டில்   . துளவத்தாமம் கலியமூர்த்தி போட்டியிடுகிறார். இவரது  கணவர் கலியமூர்த்தி புதுக்கோட்டையில்  மலர் வணிகம் செய்து வருகிறார். இதன் மூலம் தனது வாடிக்கையாளர்கள் மற்றும்   பொதுமக்களிடமும்  நன்கு அறிமுகமானவர். இந்த வார்டில்  ஆண், பெண் உள்பட மொத்தம் 2,550 வாக்காளர்கள் உள்ளனர். அதிமுக, மதிமுக, பாஜக, நாம்தமிழர் மற்றும் சுயேட்சை உள்பட மொத்தம் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் களம் காணும் . துளவத்தாமம் கலியமூர்த்தி   தனது வார்டுக்குள்பட்ட நிஜாம்காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச்சென்று  இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இவருடன் புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ஆர். ராஜசேகரன் மற்றும்  கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் உடன் சென்றனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில்   187 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.  தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top