Close
மே 13, 2024 6:42 மணி

மா சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் : நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம்

மா சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் என்ற தலைப்பில், வருகிற 13ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 13ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, மா சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி நடக்கிறது.

இப்பயிற்சியில், மா பயிரைத் தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், வளர்ச்சியூக்கிகள் பற்றியும், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கப்படுகிறது.

பயிற்சியில், விவசாயிகள், விவசாயம் கலந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 99430 08802, 70105 80683, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top