Close
மே 12, 2024 12:01 மணி

காந்தியத்திருவிழா.. பல் கலைப்போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை

காந்தி பேரவை சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

காந்தியத் திருவிழா 2023 -ஐ முன்னிட்டு புதுகையில் காந்திப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் ஆகிய போட்டிகளுக்கான இறுதி சுற்றுப் போட்டி (02.09.2023)  நடைபெற்றது.900 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

புதுகையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில், காந்தி ஜயந்தி விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு,பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் போன்ற போட்டிகளுக் கான இறுதி சுற்றுப் போட்டி 02.09.2022 (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில் பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் வைத்து தேர்ந்தெடுக் கப்பட்ட மாணவர்கள் 900 -க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் இன்றைய இறுதி சுற்றுப் போட்டியில் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் காந்தி ஜயந்தியை முன்னிட்டு புதுக்கோட் டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு,பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகளை நடத்தி வருகிறது. இவ்வாண்டு மாணவர்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக குழு நடனம் மற்றும் குழு நாட்டியம் போன்ற போட்டிகளும் நடைபெற்றது.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் 2 -ஆம் தேதி காந்திப் பேரவை சார்பில் நடைபெறும் காந்தியத் திருவிழா 2023 ஐ முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பேச்சு,பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள்நடந்தன. இப்போட்டிகளில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த 900 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

போட்டிகளை பேரவையின் தலைவர்  வைர.ந.தினகரன்  தொடக்கி வைத்தார்.பேரவை மாவட்ட இளைஞர் மன்ற அமைப்பாளர் மாணிக்கம் வரவேற்றார்.

ராணியார் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தமிழரசி மாணவர்களை ஊக்குவித்து, பாராட்டிப் பேசினார் கள்.  பேரவை நிர்வாகி நமச்சிவாயம் மாணவர்களுக்கு உறுதி மொழி ஏற்கச் செய்தார். சத்தியராம்ராமுக்கண்ணு, குயிலி முனுசாமி முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை

போட்டியின் நடுவர்களாக முருகபாரதி, நிலவை பழனியப் பன், சரவணன், அழகப்பன், வீரமணி, பழனிச்சாமி, பீர்முகமது,பேரா.விஜயலெட்சுமி,சங்கமித்ரா, ஜெயா, இசை ஆசிரியர்கள் சௌமியா, இராஜராஜேஸ்வரி,லோகேஸ்வரன், சோலைராஜ், மனோஈஸ்வரன், மாணிக்கநந்தினி, செல்வகுமார், கோவிந்தசாமி,

மணிமேகலை, முத்துமாரி, ஓவியர் தனபாலகிருஷ்ணன், நாட்டிய  ஆசிரியர்கள் முத்துக்குமார், விஜயலெட்சுமி, சாந்தி, தேவப்பிரியா, நாகராஜ், ராஜேந்திரன், கோகிலா, பாப்பு லெட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறப்பித்தனர்.

காந்திப் பேரவையின் இளைஞர் மன்ற உறுப்பினர்கள்மற்றும் பேரவை நிர்வாகிகள் விழாவினை ஒருங்கிணைத்தனர். இறுதியாக பேரவை தலைமை நிலைய செயலாளர் மோகனப்பிரியா நன்றி கூறினார்.

மாறு வேடப் போட்டி :காந்தி வேடம் மட்டும் இந்த போட்டி மட்டும் 02-10-2023  அன்று காலை 9 மணிக்கு காந்தி பூங்காவில் நடைபெறும்.  இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பங்கேற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் களும் 02-10-2023 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் காந்தியத் திருவிழாவில் மாலை 3.00 மணிக்கு வழங்கப்படும்என்று பேரவையின் நிறுவனர் வைர.ந. தினகரன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top