Close
மே 11, 2024 1:33 மணி

தஞ்சாவூரில் ஜூலை 14 முதல் 24 வரை புத்தகத் திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சாவூர்

தஞ்சை புத்தகத்திருவிழா ஜூலை14 முதல் 24 வரை 11 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டியமுன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அலுவலர்களுடன் இன்று (30.06.2023) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற (14.07.2023) முதல் (24.07.2023) வரை 11 நாட்கள் மாவட்ட நிர்வாகம்,  பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் 6 -வது புத்தகத் திருவிழா தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த புத்தகத் திருவிழா சிறப்பாக அமைவதற்காக அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று ஒவ்வொரு துறையும் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழா நடைபெறும் வளாகத்தில் புத்தகத் திருவிழாவின் அரங்குகள் அமைப்பது குறித்தும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்தும் உணவுத் திருவிழா நடைபெறும் இடம் குறித்தும் களஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நடைபெற உள்ள தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2023 முன்னிட்டு இலச்சினை வடிவமைப்பு போட்டியில் (Logo Design Competition)  கலந்து கொள்ள விரும்புபவர்கள் தஞ்சாவூர் புத்தகத்திரு விழாவிற்கான இலச்சினையினை வடிவமைத்து 1.MB அளவு JPG படமாக https://thanjavur.nic.in/thanjavurbookfestival என்ற இணைய தளத்தில் தங்கள் பெயர், வயது, முகவரி மற்றும்தொலைபேசிஎண்ணுடன் 07.07.2023  வெள்ளிக்கிழமை  மாலை 05.00 மணிக்குள் ஆன்லைனில் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு  9176995873 – 8110055765-  9443267422 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இப்புத்தகக் கண்காட்சி யின் மூலம் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்இடையே  வாசிப்புத்திறன் மேம்படுத்திட முடியும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்துடன் இக்கண்காட்சி நடைபெற உள்ளது. என்று மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top